Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    MESHAM Guru Peyarchi Palan

மேஷ ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடமான (விரைய ஸ்தானம்) மீன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அங்கிருந்து உங்கள் (மேஷ ராசி) ஜென்ம ராசிக்கு 22-04-2023 அன்று இடம் மாறுகிறார். சுப கிரகமான குரு பகவான் ராசியிலேயே இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஜென்ம ராசியில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்றாலும் வாழ்க்கையில் பல திருப்பங்கள் உண்டாகும். உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக தான் இருக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பது நல்ல ஒரு அமைப்பாகும். கடந்த கால விரைய செலவுகள் குறைந்து சேமிக்கக்கூடிய அளவிற்கு பண வரவுகள் இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பழைய கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். பொது காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படவும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். முன்கோபத்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் சிக்கல்களை சமாளிக்க முடியும். சிலருக்கு இட மாறுதல் தொடர்பான விஷயங்கள் நடக்கும். உங்கள் சொல்லிலும், செயலிலும் நிதானம் தேவை. எப்போதும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நீங்கள் எல்லா விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒவ்வொரு செயலிலும் முன்யோசனை அவசியம். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பதவியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு வந்த குரு பகவான் 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5மிடத்தை பார்ப்பபதால் குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7மிடத்தை பார்ப்பதால் கூட்டு தொழில், வியாபாரம், நண்பர்கள் மூலம் நல்லது நடக்கும். திருமண போன்ற சுப காரியங்கள் கை கூடி வரும். குரு உங்கள் ராசிக்கு 9மிடத்தை 9ம் பார்வையாக பார்ப்பதால் தெய்வ அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் இதுவரை தடைபட்ட காரியங்கள் கைகூடும். பல நல்ல மனிதர்களின் தொடர்பும், மனதில் நல்ல எண்ணங்களும் உருவாகும். குடும்பத்தில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாக்கு திறமையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டு. உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புகள் உருவாகும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. குடும்பத்தில் செலவுகள் படிப்படியாக குறையும். பொருளாதார ரீதியாக மிக பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மறைமுகமான வழியில் தன லாபங்கள் வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொந்த, பந்தங்களால் ஒரு சிலருக்கு நெருக்கடிகளும் வரும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பர். சிலருக்கு வீடு, மனை அமையும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உற்றார், உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பூர்விக சொத்து வகையில் ஒரு சில பிரச்சனைகள் வாய்ப்புண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குல தெய்வ வழிபாடு மூலம் சிறப்பான பலனை பெற முடியும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். புதிய திட்டங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோகத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முக்கிய நபர்களின் அறிமுகம் ஆதாயத்தை தரும். தொழில், வியாபாரத்தில் இழுபறியில் இருந்தது தாமதமின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை செய்ய முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் ஏதும் செய்ய வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.

பரிகாரம் : திருச்செந்தூர் முருகரை சென்று வழிப்படவும்

( For Mesham : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Mesham (Aries) [Stars : Ashwini 1,2,3,4 Barani 1,2,3,4 Kirthigai 1 quarters]

Mesham is the first and raising rasi house among the twelve rasis in the vedic horoscope chart. People who are born in the mesha rasi always think higher, broad minded and have speedy approach in all the aspects. Spontaneity, action-orientation, courageousness, driving ability, innovation & open minded are the best qualities. They are able to take up higher positions in business, job, social services, politics and other related activities. Though these mesha rasi people are bit aggressive, they are kind and very helpful to others whoever believes and approaches them. Basically fear to god and fight for the best are naturally cultivated in their mind. Then and there if any show stoppers in life, easily they could cross the barrier with will power. Always sun shines for mesha rasi as the owner of rasi is Mars and heats up everything for continuous improvement.

They get excellent opportunities from the community, political and the government if they intend to serve better. Some people may reach higher levels in education to be honoured like doctorate or scientist. Most of the time, no one can influence these people with any trick as they are able to find and crackdown anything with intuition power. Many under this sign would like to travel for goals or to reach target. Naturally brave hearted people. Also if Mars with Saturn are strong sometimes they become doctors. Many are sports personalities. Always maintains neat and clean policy in everything. May live around 85 to 90 years if maintains good health. These people are usually vigorous and possess a strong constitution and also have incredible powers of speedy recovery. Looks straight forward and open minded; sometimes become world famous. Lucky colours are red and white, stones are ruby and diamond, and numbers are 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.